/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு
/
மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு
ADDED : ஆக 19, 2024 01:26 AM

வால்பாறை;வால்பாறையில், தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. இதனால், ஆழியாறில் இருந்து வால்பாறை வரும் வழியில் உள்ள மலைப்பாதையில், மழையினால் ஏற்படும் பாதிப்புக்களை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று (19ம் தேதி வரை) கனமழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையினர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் உள்ளதை, உதவி கோட்ட பொறியாளர் தினேஷ்குமார், உதவி பொறியாளர் பிரதீப் ஆகியோர் ஆய்வு செய்தனர்.