/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
393 தனியார் பள்ளி பஸ்களில் ஆய்வு
/
393 தனியார் பள்ளி பஸ்களில் ஆய்வு
ADDED : மே 11, 2024 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையத்தில் 393 தனியார் பள்ளி பஸ்களை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த மாதம் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில், தனியார் பள்ளி பஸ்களை, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்துக்கு உட்பட்டு இயக்கப்படும், 55 தனியார் பள்ளிகளின் 393 பஸ்கள் நேற்று, மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பள்ளியில், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் மற்றும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில், ஆய்வு செய்யப்பட்டது. இதே போல் கோவையிலும் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் ஆய்வு நடந்தது.