/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 28, 2024 11:32 PM

பெ.நா.பாளையம்;வெள்ளக்கிணறு அருகே ரோட்டில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துடியலூர், வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக துாறல் மழை பெய்து வருகிறது. உருமாண்டம்பாளையம் ரயில்வே கேட்டில் இருந்து வெள்ளக்கிணறு செல்லும் ரோட்டில், மே பிளவர் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோட்டில் விழுந்த மரம் உடனடியாக வெட்டி அகற்றப்பட்டது. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது, தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் ரோட்டின் ஓரத்தில் அபாயகரமான நிலையில் உள்ள காய்ந்து போன மரங்களை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.