/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் தண்ணீருக்காக சுத்திகரிப்பு கருவி பொருத்தணும்
/
பஸ் ஸ்டாண்டில் தண்ணீருக்காக சுத்திகரிப்பு கருவி பொருத்தணும்
பஸ் ஸ்டாண்டில் தண்ணீருக்காக சுத்திகரிப்பு கருவி பொருத்தணும்
பஸ் ஸ்டாண்டில் தண்ணீருக்காக சுத்திகரிப்பு கருவி பொருத்தணும்
ADDED : பிப் 26, 2025 11:36 PM
பொள்ளாச்சி: வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில், குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் பயணியர் அவதியடைகின்றனர்.
கோவை மற்றும் தென்மாவட்டங்கள் இடையிலான அரசு பஸ்கள், பொள்ளாச்சி மார்க்கமாக இயக்கப்படுகிறது. இது தவிர, பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகப்படியான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அவ்வகையில், பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்கும் வகையில் எந்தவொரு வசதியும் கிடையாது.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், பஸ் ஸ்டாண்ட்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி இல்லாததால் பயணியர் தாகம் தீர்க்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அருகில் உள்ள கடைகளில், தண்ணீரை விலை கொடுத்து வாங்கிச்செல்கின்றனர்.
பயணியர் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்டில், கோவை பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில், குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் தண்ணீர், சுகாதாரமானதாக இருக்குமா என பலரும் சந்தேகிக்கின்றனர்.
வேறு எங்கும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி கிடையாது. குழந்தையுடன் வரும் பெண்கள், குடிநீர் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், தண்ணீர் பாட்டிலை விலை கொடுத்து வாங்க முடியாமல் தாகத்தால் தவிக்கின்றனர்.
பயணியர் நலன் கருதி பஸ் ஸ்டாண்டில் தற்காலிகமாக குடிநீர் சுத்திகரிப்பு குடிநீர் கருவி அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பஸ் ஸ்டாண்டில் முக்கிய பிரச்னையான குடிநீருக்கு சுத்திகரிப்பு கருவி அவசியமாக உள்ளது.

