/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரங்களில் குப்பை ஏராளம்; சுகாதார சீர்கேட்டினால் பாதிப்பு
/
ரோட்டோரங்களில் குப்பை ஏராளம்; சுகாதார சீர்கேட்டினால் பாதிப்பு
ரோட்டோரங்களில் குப்பை ஏராளம்; சுகாதார சீர்கேட்டினால் பாதிப்பு
ரோட்டோரங்களில் குப்பை ஏராளம்; சுகாதார சீர்கேட்டினால் பாதிப்பு
ADDED : மார் 06, 2025 11:45 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வடசித்துார் ரோட்டில், கொண்டம்பட்டி பகுதியில் ரோட்டோரத்தில் ஏராளமான குப்பை கிடப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
கிணத்துக்கடவு வடசித்துார் ரோட்டில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், லட்சுமி நகர் முதல் கொண்டம்பட்டி வரை, ரோட்டின் இரு பகுதிகளிலும் ஆங்காங்கே அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில், ரோட்டோரத்தில் உள்ள குப்பைக்கு சிலர் தீ வைக்கின்றனர். இதனால் புகை மாசடைவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
அதிக காற்றின் காரணமாக தீயில் எரியும் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் குப்பை வாகன ஓட்டுநர்கள் மீது பறந்து வந்து விழுகிறது. இதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இரண்டு கிலோமீட்டர் தொலைவில், பள்ளி எதிரே, கடைகள் அருகில் என, நான்கு முதல் ஐந்து இடங்களில் குப்பை கொட்டப்பட்டுள்ளது.
மக்கள் பொதுவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.
மேலும், ரோட்டோரத்தில் குப்பையை எரிப்போர் மீது, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.