sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போத்தனுார் எவரெஸ்ட் ரோட்டில் தினமும் விபத்து! கட்டாயம் தடுக்க வேண்டும் வேகத்தடை அமைத்து

/

போத்தனுார் எவரெஸ்ட் ரோட்டில் தினமும் விபத்து! கட்டாயம் தடுக்க வேண்டும் வேகத்தடை அமைத்து

போத்தனுார் எவரெஸ்ட் ரோட்டில் தினமும் விபத்து! கட்டாயம் தடுக்க வேண்டும் வேகத்தடை அமைத்து

போத்தனுார் எவரெஸ்ட் ரோட்டில் தினமும் விபத்து! கட்டாயம் தடுக்க வேண்டும் வேகத்தடை அமைத்து


ADDED : ஏப் 23, 2024 02:07 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைகளுக்கு ஆபத்து


கோடை விடுமுறையை முன்னிட்டு, வ.உ.சி.மைதானத்தில் குழந்தைகள் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளில், ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்தினருடனும்குழந்தைகள், மாலை வேளையில் இங்கு வருகின்றனர். மைதானத்திற்குள் சில இளைஞர்கள், அதிவேகத்தில் பைக்கை ஓட்டுவதால், விபத்து நிகழ வாய்ப்புள்ளது.

- சரவணன்,காந்திபுரம்.

நோய் பரவும் அபாயம்


போத்தனுார், கருணாநிதி நகர், ஜோதி நகர், இரண்டாவது தெரு சந்திப்பில், சாலையோரம் குப்பை குவிந்துள்ளது. குப்பையை நாய்கள் சாலையில் இழுத்துப்போட்டு சிதற விடுகின்றன. தெரு முழுவதும் குப்பையாக கிடக்கிறது. சுகாதார சீர்கேடு மற்றும் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

- உமாமகேஸ்வரி, போத்தனுார்.

தொடரும் அவலம்


ஆவாரம்பாளையம், 28வது வார்டு, முத்தமிழ் படிப்பகம் முன்பு சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்வதில்லை. கால்வாயில், கழிவுநீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. துார்வாராததால், அடிக்கடி இதேபோல, சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது. பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- பெருமாள்சாமி, ஆவாரம்பாளையம்.

வளைவில் 'பெரியகுழி'


பாலக்காடு ரோடு, மரக்கம்பெனி அருகே, மதுக்கரை அரசு பள்ளியை அடுத்து, மரப்பாலம் செல்லும் வளைவில், சாலையில் பெரிய குழி உள்ளது. வளைவில் வரும் பெரிய வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. பைக்கில் வருவோர் குழியில் மாட்டி விழுகின்றனர்.

- வேதிகா, மரப்பாலம்.

நிறைந்து கிடக்கும் குப்பை


கோவை மாநகராட்சி, 51வது வார்டு, ராஜிவ் காந்தி நகரில், குப்பையை சேகரிக்க, துாய்மை பணியாளர்கள் யாரும் வருவதில்லை. தெரு முழுவதும் குப்பை நிறைந்து காணப்படுகிறது. சாலையோரம் மலை போல, குப்பை குவிந்துள்ளது.

- வேல்முருகன், ராஜீவ்காந்தி நகர்.

சாலை நடுவே குழி


கவுண்டம்பாளையம், 17வது வார்டு, யூனியன் ரோட்டில் மேம்பாலத்தில், பாதசாரிகளுக்கான நடைபாதையில், சாலை நடுவே பெரிய குழி உள்ளது. இரவு நேரங்களில், நடந்து செல்வோர் குழியில் மாட்டி கீழே விழுகின்றனர்.

- நாகராஜன், கவுண்டம்பாளையம்.

தாரால் குழியை மூடுங்க!


பாலக்காடு ரோடு, எட்டிமடை ரவுண்டானா அருகே, சூர்யா சூப்பர் மார்க்கெட் எதிர்புறம், சாலை திருப்பத்தில் தார் சாலை இடிந்து, பாதி சாலை வரை குழியாக இருந்தது. புகார் செய்தபின், அதிகாரிகள் மண் கொண்டு குழியை நிரப்பியுள்ளனர். நிரந்தர தீர்வாக, தார் கொண்டு குழியை மூட வேண்டும்.

- கார்த்திக், க.க.சாவடி.

அதிகரிக்கும் விபத்துகள்


பொள்ளாச்சி ரோடு, கற்பகம் பல்கலை அருகே சர்வீஸ் ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் அருகே, பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. மோசமான சாலையால், இப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்புகள் நிகழும் முன், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.

- சக்திவேல், மலுமிச்சம்பட்டி.

வேகத்தடை வேண்டும்


போத்தனுார் மேம்பாலத்தின் கீழ், எவரெஸ்ட் ரோட்டில் ஆபத்தான வளைவு உள்ளது. இப்பகுதியில், பைக்கில் செல்வோர் தினமும்விபத்தில் சிக்குகின்றனர். வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

- பாலன், போத்தனுார்.

தெருநாய்கள் தொல்லை


சிங்காநல்லுார், சாந்தி சோசியல் சர்வீஸ், எதிர்புறம், டெக்ஸ்டூல் லே-அவுட், சூர்யா கார்டன் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை, நாய்கள் துரத்தி மிரட்டுகின்றன.

- அஜீதா, சிங்காநல்லுார்.






      Dinamalar
      Follow us