/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்பத்தை கடைபிடியுங்கள்
/
நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்பத்தை கடைபிடியுங்கள்
நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்பத்தை கடைபிடியுங்கள்
நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்பத்தை கடைபிடியுங்கள்
ADDED : ஜூன் 06, 2024 11:18 PM
பெ.நா.பாளையம்:நிலக்கடலை சாகுபடியில் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டுமென, முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
விதைப்புக்கு சிறந்த பருவம் ஜூன், ஜூலை, டிச., ஜன., மாதங்கள் ஆகும். குறைந்த வயதுடைய பூச்சி நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை பயிர் செய்து, கூடுதல் லாபம் பெற முடியும். நுண்ணூட்ட சத்துக்கள் பயிர் குறைபாடு இன்றி வளரவும், மண்ணில் உள்ள சத்துக்களை எடுக்கவும், பெரிய அளவிலான சத்துகளான தழை, மணி, சாம்பல் சத்துக்களை அடி உரமாக இட வேண்டும்.
வயலில் ஈரம் இருக்கும் போது, களைக்கொல்லி தெளிக்க வேண்டும். விதைத்த, 45 நாட்களுக்கு களையை கட்டுப்படுத்தி, ஜிப்சம் இட்டு மண் அணைப்பதால், காய்கள் திரட்சியாகவும், அதிக எடை கொண்டதாகவும் உருவாகிறது.
சரியான அறுவடை தருணத்தில் செடியின் நுனி இலை மஞ்சளாக மாறுதல் மற்றும் அடி இலைகள் காய்ந்து உதிரும். சில செடிகளை பிடுங்கி காய்களை உடைத்து பார்த்தால், தோலின் உள்பாகம் கரும்பழுப்பு நிறமாக இருக்கும் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.