/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : மே 30, 2024 11:31 PM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் அ.தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வரும் ஜூன், 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு செல்லும் அ.தி.மு.க., கட்சியின் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., தலைமை தேர்தல் முகவர் தோப்பு அசோகன் தலைமை வகித்தார். வேட்பாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண் குமார் பேசுகையில்,வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு முகவர்கள் அடையாள அட்டையுடன் குறித்த நேரத்துக்கு செல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியில் செல்லக்கூடாது.
வாக்கு என்னும் மையத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார். கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.