/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தையல் இல்லாத அறுவை சிகிச்சை கே.ஜி., மருத்துவமனை சாதனை
/
தையல் இல்லாத அறுவை சிகிச்சை கே.ஜி., மருத்துவமனை சாதனை
தையல் இல்லாத அறுவை சிகிச்சை கே.ஜி., மருத்துவமனை சாதனை
தையல் இல்லாத அறுவை சிகிச்சை கே.ஜி., மருத்துவமனை சாதனை
ADDED : ஜூன் 30, 2024 11:02 PM

கோவை:ரோபோ உதவியுடன் தையல் இல்லாத அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, கே.ஜி., மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
கோவையில் உள்ள முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றான கே.ஜி., மருத்துவமனை, இந்தியாவின் முதல் ரோபோ உதவியுடன், தையல் இல்லாத பெருநாடி வால்வு மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளது.
74 வயதான ஆண் நோயாளிக்கு, பெருநாடி வால்வு ஸ்டெனோசிஸ் நோய் கண்டறியப்பட்டதால், ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை டாக்டர் அருண்குமார் தலைமையில், இந்த அரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர் அருண்குமார் கூறுகையில், ''டா வின்சி அறுவைசிகிச்சை முறையால் வழங்கப்பட்ட 3டி திறமை மற்றும் பெரிதாக்கப்பட்ட இமேஜிங் வாயிலாக, எதிர்காலத்தில் இடப்பெயர்வு அபாயம் இல்லாமல், வால்வை பெருநாடியில் பாதுகாப்பாக வைக்க முடிந்தது. ரோபாட்டிக்ஸ் பயன்படுத்தப்பட்டதால், வால்வு சரியாக அமர்ந்திருப்பதற்கான கூடுதல் உறுதி மற்றும் நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம்,'' என்றார்.