/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறன்களை வளர்த்து வாழ்வில் முன்னேற அறிவுரை
/
திறன்களை வளர்த்து வாழ்வில் முன்னேற அறிவுரை
ADDED : செப் 11, 2024 10:51 PM

எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் ஆய்வகம் திறப்பு
எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரியில், ஏ.ஐ., இன்னோவேஷன் ஆய்வக திறப்பு விழா மற்றும் வைஸ் வொர்க் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வு நடந்தது.
பெங்களூரு, வைஸ் வொர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் மதன்குமார் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''ஏ.ஐ., இன்னோவேஷன் லேப், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை கற்றல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவும் மையமாகவும் செயல்படும்,'' என்றார். ஒப்பந்தத்தின் வாயிலாக, கல்லுாரியின் மாணவர்களுக்கு தொழில்துறை நடைமுறை அனுபவம் மற்றும் புதிய கற்றல் வாய்ப்புகள் வழங்கப்படும். தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில், நிறுவனம் மற்றும்மாணவர்கள் இணைந்து செயல்பட முடியும்.
சாய் நர்சிங் கல்லுாரி துவக்கம்
க.க.சாவடி, வீரப்பனுாரில், நைட்டிங்கேல் கல்வி குழுமத்தின் கீழ் சாய் நர்சிங் கல்லுாரியை, எம்.பி., திருமாவளவன் திறந்து வைத்தார். கல்லுாரியின் திறப்பு விழா கல்வெட்டை, எம்.பி., ராஜ்குமார் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, சாய் கல்லுாரி மற்றும் நைட்டிங்கேல் கல்வி குழும முதல்வர்களை எம்.பி.,க்கள் திருமாவளவன், ராஜ்குமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
கல்லுாரி தாளாளர் மனோகரன், மலையாள நடிகர் பிரதீப் ஜோஸ், கொங்குநாடு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜூ, நடராஜ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நடராஜன், டாக்டர் கணபதி, சாய் நர்சிங் கல்லுாரியின் முதல்வர் அன்னம் ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு வரவேற்பு
பச்சாபாளையம், ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா, விமர்சையாக நடந்தது.
சிறப்பு விருந்தினர் ஸ்ரீராம் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் சி.இ.ஓ., மற்றும் ஸ்ரீராம் ஸ்பிராய்ட்ஸ் அண்ட் கிராபைட்ஸ் நிர்வாக இயக்குனர் தீனதயாளன், 'தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பொறியியல் வாழ்க்கையை வடிவமைத்தல்', என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசினார்.
விழாவிற்கு, தலைமை வகித்த எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லுாரியில் உள்ள நவீன உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி திறன்களை வளர்த்து, வாழ்வில் உயரிய நிலையை மாணவர்கள் அடைய வாழ்த்தினார். கினியர் டெக் பில்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புலியூடையன், முன்னாள் மாணவியான சென்னை பேங்க் ஆப் நியூயார்க் வணிக ஆய்வாளர் பிரியா, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இயக்குனர் (கல்வித்துறை) அலமேலு, கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்தினராஜ், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.