/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெற்றோர்களின் கனவை நனவாக்க அறிவுறுத்தல்
/
பெற்றோர்களின் கனவை நனவாக்க அறிவுறுத்தல்
ADDED : பிப் 27, 2025 09:00 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் மாணவர் மன்றம்- தொடக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் வரவேற்றார். கல்லுாரி முதன்மையர் (மாணவர் நலன்) முத்துக்குமரன், மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கல்லுாரித் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் கல்வி கற்பதுடன் மனம், உடல், அறிவு ஆகியவற்றை நலமுடன் பேண வேண்டும். பெற்றோர்களின் கனவு மற்றும் எதிர்பார்ப்பை நனவாக்க வேண்டும்,'' என்றார்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் மாணவர் நலன் உதவிப் புல முதன்மையர் விஜிலேஷ் பேசினார். கல்லுாரி இயக்குநர் சரவணபாபு, புல முதன்மையர் உமாபதி, நிர்வாக மேலாளர் ரகுநாதன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.