/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருப்பு கவுன் அணிய வக்கீல்களுக்கு விலக்கு
/
கருப்பு கவுன் அணிய வக்கீல்களுக்கு விலக்கு
ADDED : ஏப் 27, 2024 12:58 AM
கோவை;வக்கீல்கள் கருப்பு 'கவுன்' அணியாமல், கோர்ட்டில் ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்கள் கருப்பு 'கவுன்' அணிவதிலிருந்து விலக்கு அளிக்க, கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்தாண்டு, கோடை காலம் முழுவதும் 'கவுன்' அணிவதில் விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட் அறிவித்தது.
கடந்தாண்டை விட, இந்தாண்டு அனைத்து மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க, பார் கவுன்சில் சார்பில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று, இந்தாண்டும் கவுன் அணியாமல் கோர்ட்டில் ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

