/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை பயிர் சாகுபடிக்கு மானியம் வேளாண் துறை அறிவிப்பு
/
கோடை பயிர் சாகுபடிக்கு மானியம் வேளாண் துறை அறிவிப்பு
கோடை பயிர் சாகுபடிக்கு மானியம் வேளாண் துறை அறிவிப்பு
கோடை பயிர் சாகுபடிக்கு மானியம் வேளாண் துறை அறிவிப்பு
ADDED : மே 12, 2024 10:56 PM
பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் ஏப்., மே, ஜூன் மாதங்களில் பெறும் மழை அளவு, 145 மி.மீ., ஆகும். மழை நீருடன், குறைந்த நீர் தேவை உள்ள பயிர்களான தானியங்கள், பயிறு வகைகள் மற்றும் நிலக்கடலை, எள் சாகுபடி செய்யப்படுகிறது.
விதைப்பு செய்ய தேவையான பயிறு விதைகளுக்கு, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு, 50 சதவீதம் அல்லது, 50 ரூபாய் இதில் எது குறைவோ அந்த அளவு கிலோவிற்கு மானியத்தில் பயிறு விதைகள் வழங்கப்படுகிறது.
மேலும், சான்று பெற்ற விதைகளுடன் கலந்து விதைக்க தேவையான உயிர் பூஞ்சை கொல்லிகளான ட்ரைகோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ், புளூரா சென்ஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளும்படி விவசாயிகளுக்கு, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.