/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மே 17, 2024 11:15 PM
கிணத்துக்கடவு;பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் இரண்டு மாத காலம் கிராம தங்கல் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஐந்து நாட்கள் தனியார் என்.ஜி.ஒ.,நிறுவனத்துடன் இணைந்து விழிப்புணர்வுஏற்படுத்தினர்.
இதில், கோடையில் பறவைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என, நோட்டீஸ் வழங்கினார்கள். மற்றும் போக்குவரத்து, சாலை பாதுகாப்பு போன்றவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கண் மற்றும் உடல் உறுப்புகள் தானம் சார்ந்த விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.
சர்க்கார்பதியில் உள்ள வேளாண் முறைகள் மற்றும் கிராம வளர்ச்சி குறித்து வேளாண் மாணவர்கள் கேட்டறிந்தனர்.

