/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகில இந்திய கூடைப்பந்து போட்டி இந்திய ராணுவ அணி அசத்தல்
/
அகில இந்திய கூடைப்பந்து போட்டி இந்திய ராணுவ அணி அசத்தல்
அகில இந்திய கூடைப்பந்து போட்டி இந்திய ராணுவ அணி அசத்தல்
அகில இந்திய கூடைப்பந்து போட்டி இந்திய ராணுவ அணி அசத்தல்
ADDED : ஆக 11, 2024 10:36 PM

கோவை;அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்திய ராணுவ அணி, அசத்தலாக வெற்றி பெற்றது.
பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 58வது ஆண்டு அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டி, கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இரண்டாது நாள் நடைபெற்ற கூடைப்பந்து முதல் போட்டியில், இந்திய ராணுவ அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் இந்திய ராணுவ அணி, 83 - 56 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில், இந்திய ரயில்வே அணியை எதிர்த்து, லயோலா கல்லுாரி அணி மோதியது. இதில் இந்திய ரயில்வே அணி, 82 - 61 என்ற புள்ளி கணக்கில் வெற்றி அடைந்தது.
மூன்றாவது போட்டியில், இந்தியன் வங்கி அணியை எதிர்த்து, மத்திய செயலக அணி விளையாடியதில், இந்தியன் வங்கி அணி 81 - 63 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
நான்காவது போட்டியில், பாங்க் ஆப் பரோடா அணியை எதிர்த்து வருமான வரி அணி விளையாடியது. இதில் பாங்க் ஆப் பரோடா அணி, 82 - 76 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.