/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு
/
சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு
சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு
சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : மே 27, 2024 11:16 PM
பெ.நா.பாளையம்:கோவை மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க, ஒரு கோடியே, 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சராசரியாக, 76 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, வரகு ஆகிய சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக, 609 மி.மீ., மழை பெய்கிறது.
ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு, ராகி சாகுபடியினை ஊக்குவித்து நுகர்வோர் நலம் பேணவும், ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டம் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
சிறுதானியங்கள் குறைவான நீர் தேவை கொண்ட பயிர்களாகும். 350 மி.மீ., அளவு நீர் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதவை. குறுகிய கால வயது கொண்டவை.
குறைந்த மண்வளம் உள்ள பூமிகளிலும் சாகுபடி செய்யலாம். புரதச்சத்து, நார்ச்சத்து, நல்ல கொழுப்பு சத்து, இரும்பு சத்து நிறைந்துள்ளது. வயிற்றுப்புண் மற்றும் குடல் புண்ணை ஆற்றும் குணம் உடையது.
சிறுதானியங்களுக்கு தேவையான உரங்கள், விதைகள் வாங்க, பயிர் செய்ய மானியங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள், அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் என, கோவை வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி அறிவித்துள்ளார்.