/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமலாகுது 'நீலகிரி மாடல்!' முனைப்பு காட்டும் மிசோரம் அரசு : கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கள ஆய்வு
/
அமலாகுது 'நீலகிரி மாடல்!' முனைப்பு காட்டும் மிசோரம் அரசு : கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கள ஆய்வு
அமலாகுது 'நீலகிரி மாடல்!' முனைப்பு காட்டும் மிசோரம் அரசு : கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கள ஆய்வு
அமலாகுது 'நீலகிரி மாடல்!' முனைப்பு காட்டும் மிசோரம் அரசு : கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கள ஆய்வு
ADDED : செப் 04, 2024 12:55 AM

மேட்டுப்பாளையம்;'மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டியில், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கள ஆய்வு மேற்கொண்டது, எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது' என, மிசோரம் மாநில வேளாண் துறை சிறப்புச் செயலாளர் ராம்டின்லியானி தெரிவித்தார்.
மிசோரம் அரசு, விவசாய சந்தை உறுதி நிதி மேலாண்மைக் குழு அமைத்துள்ளது.
இந்த குழு மிசோரம் மாநில விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களான இஞ்சி, மஞ்சள், மிளகாய், துடைப்ப புல் ஆகியவற்றோடு இதர விவசாய உற்பத்திப் பொருட்களை, மேலாண்மை செய்வதிலும், சந்தை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் முக்கிய பங்காற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு கடந்த ஆக., 24 மற்றும் 25ம் தேதிகளில், மிசோரம் மாநில தோட்டக்கலைத்துறை சிறப்பு செயலாளர் தலைமையில், உதவி இயக்குனர்கள், கூட்டுறவு துணை பதிவாளர், நில வளங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை புரிந்தனர்.
இக்குழுவினர், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் காய்கறி சில்லரை மற்றும் ஏல விற்பனை மையம், மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு ஏல விற்பனை மையத்தை பார்வையிட்டனர். அங்கு, விவசாயிகள் கொண்டு வரும் மலை காய்கறிகளை ஏலம் விடுவது, பூண்டு, உருளைக்கிழங்குகள் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடுவது குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
அடுத்த வாரம் அறிக்கை
மிசோரம் மாநில வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சிறப்புச் செயலாளர் ராம்டின் லியானி கூறியதாவது:-
எங்களது ஆய்வில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டது, மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. இங்கு இடைதரகர்கள் இன்றி வியாபாரம் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கும், கூட்டுறவு சங்கத்திற்கும் வருவாய் கிடைக்கிறது. மண் வளத்திற்கு ஏற்ப உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவது விவசாயிகளுக்கு நன்மை தருகிறது. கள ஆய்வு தொடர்பான அறிக்கையை, அடுத்த வாரம் சமர்பிக்க உள்ளோம். அரசின் அறிவுறுத்தல்படி செயல்படுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.