/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்மன் நகர் ரிசர்வ் சைட்டில் வேலி அமைக்க எதிர்பார்ப்பு
/
அம்மன் நகர் ரிசர்வ் சைட்டில் வேலி அமைக்க எதிர்பார்ப்பு
அம்மன் நகர் ரிசர்வ் சைட்டில் வேலி அமைக்க எதிர்பார்ப்பு
அம்மன் நகர் ரிசர்வ் சைட்டில் வேலி அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 04, 2024 01:09 AM
போத்தனூர்;அம்மன் நகர் ரிசர்வ் சைட்டில் விடுபட்ட இடத்தில் வேலி அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் எதிர்பார்த்துள்ளனர்.
போத்தனூரிலிருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் சாலையின் துவக்கத்தில் அம்மன் நகர் உள்ளது. மாநகராட்சியின், 85வது வார்டுக்குட்பட்ட இப்பகுதியின் பிரதான சாலையின் முடிவில் ராஜவாய்க்கால் செல்கிறது.
இதனையொட்டி, 30 சென்ட் இடம், ரிசர்வ் சைட் (பூங்கா அமைக்க) விடப்பட்டுள்ளது. ராஜவாய்க்காலை அடுத்து, வெள்ளலூர் பேரூராட்சியின் முதலாவது வார்டு துவங்குகிறது.
இங்குள்ள விவசாய பூமியை, ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் வாங்கி, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்தனர். அப்போது அவர்கள், ராஜவாய்க்காலின் குறுக்கே கல்வெர்ட் கட்டி, பிரதான சாலையாக காண்பித்துள்ளனர்.
இதற்கு, அம்மன் நகர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பிலும் வழக்கு போடப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், அவ்விடத்தில் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புரமோட்டர்கள் எதிர்ப்பால், பாதை மட்டும் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் புரமோட்டர்கள் மீண்டும் தொடுத்த வழக்கில், நிலம் சம்பந்தமான பிரச்னை குறித்து, ஆர்ட்டிக்கிள் 226ன்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என குறிப்பிட்டு, புரமோட்டர்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் இன்றி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, வேலி அமைக்கப்படாமல் உள்ள பாதையை, உடனடியாக அடைக்க வேண்டும்.
பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றி, முழுமையாக, 30 சென்ட் இடத்தையும் மீட்டு, மாநகராட்சிக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து காத்திருக்கின்றனர்.