/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை சார்பில் கிரிக்கெட் போட்டி துவக்கம்
/
அண்ணா பல்கலை சார்பில் கிரிக்கெட் போட்டி துவக்கம்
ADDED : மார் 21, 2024 11:56 AM

கோவை:அண்ணா பல்கலை மண்டல வளாகம் சார்பில், இன்ஜி., மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கி மார்ச் 24ம் தேதி வரை நடக்கிறது.
அண்ணா பல்கலை கோவை மண்டல வளாகத்தின் உடற்கல்வித்துறை சார்பில் இன்ஜி,. மாணவர்களுக்கு 'இன்ஜினீயர்ஸ் பிரிமியர் லீக் - 24' என்ற டி - 20 கிரிக்கெட் போட்டி, அண்ணா பல்கலை மண்டல வளாக மைதானத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 18 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன. அண்ணா பல்கலை கோவை மண்டல வளாக 'டீன்' சரவணக்குமார் துவக்கி வைத்தார். பல்கலை உடற்கல்வி பயிற்றுனர் சரவணமூத்தி மற்றும் உடற்கல்வி இயக்குனர் சிவசங்கர் உடனிருந்தனர்.
நேற்று நடந்த முதல் போட்டியில், ஸ்ரீ ரங்கநாதர் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் விவேகானந்தா மேலாண்மை கல்லுாரி அணியை வீழ்த்தியது. போட்டியில் ரங்கநாதர் கல்லுாரியின் தினேஷ் (68 பந்துகளில் 132*) அதிரடியாக விளையாடினார்.
இரண்டாவது போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லுாரி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ரங்கநாதன் கல்லுாரி அணியை வீழ்த்தியது. தனலட்சுமி சீனிவாசன் அணி வீரர் முகமது ரியாஸ் 51 ரன்கள் எடுத்தார்.

