/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட வந்தவர் அண்ணாமலை'
/
'தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட வந்தவர் அண்ணாமலை'
'தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட வந்தவர் அண்ணாமலை'
'தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட வந்தவர் அண்ணாமலை'
ADDED : ஏப் 12, 2024 01:28 AM

கோவை;''தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட, மீட்க நேர்மையான ஒருவரே அண்ணாமலை,'' என, தெலுங்கு தேச கட்சி பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் பேசினார்.
கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான நாரா லோகேஷ் நேற்று இரவு பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை தனது ஐ.பி.எஸ்., பதவி, வசதி வாய்ப்புகளை துறந்து மக்கள் சேவை செய்வதற்காக வந்துள்ளார். அதுவும் கோவை மக்களுக்கு சேவை செய்ய விரும்பி வந்துள்ளார். அவரை கோவை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலை சிறுவயதிலேயே ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று போலீஸ் உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். கர்நாடகாவில் அவர் எஸ்.பி., யாக சேவை செய்தால், அவரை கர்நாடகத்தின் சிங்கம் என்று அழைத்தனர். அவர் தற்போது தமிழகம் திரும்பி, டி.பி.எஸ்., அதாவது, 'தமிழ் பீப்பிள் சர்வீஸ்' செய்யப் போகிறார்.
தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட, மீட்க நமக்கு நேர்மையான ஒருவர் வேண்டும். அவர்தான் அண்ணாமலை. அவரை மோடி கோவைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரை தேர்வு செய்து லோக்சபாவுக்கு அனுப்பி வைக்க வேண்டியது கோவை மக்களின் கடமை. ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டி அரசு பொறுப்புக்கு வந்த பின், என் தந்தை, நான் உட்பட பலரும் சொல்ல முடியாத துயரத்துக்கு தள்ளப்பட்டோம் அப்போது அண்ணாமலை என்னை போனில், அழைத்து எனக்கு வேண்டிய உதவிகளை செய்தார்.
அண்ணாமலை ஆபத்துக்கு உதவும் ஆபத்வாந்தவன். அவரது பேச்சு வாழ் வீச்சு போல கூர்மையாக இருக்கும். அதனால் தான் அனைத்து அரசியல்வாதிகளும் அவரைப் பார்த்து கதறுகின்றனர். தமிழகத்தில் அண்ணாமலை மிகவும் பிரபலமாகி விட்டார். அவரது அயராத உழைப்பு, நேர்மை, தமிழக மக்களிடம் அவரை எளிதாக கொண்டு போய் சேர்த்துள்ளது. பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா,' 'கிஷான் விகாஸ்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நம் நாட்டின் பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடுகள் செய்ய துவங்கி விட்டன. 'ஸ்டார்ட் அப் இந்தியா,' 'டிஜிட்டல் இந்தியா,' 'ஸ்கில் இந்தியா,' 'மேக் இன் இந்தியா' என, ஏராளமான திட்டங்கள் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு கொண்டு வந்தவை.
தொழில் நகரமான கோவைக்கு ஏராளமான திட்டங்கள், பல லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா திட்ட மையமாக கோவை விரைவில் மாறும். அதற்கான திட்டங்களை மோடி அரசு ஏற்கனவே துவக்கி விட்டது. ராணுவ தளவாட உற்பத்தி மையம், ஆட்டோமொபைல் கிளஸ்டர் என, ஏராளமான திட்டங்கள் கோவையை நோக்கி வந்து கொண்டே இருக்கும். அதற்கு அண்ணாமலையை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்
இவ்வாறு, அவர் பேசினார்.

