/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் ஸ்வேதாவுக்கு அண்ணாமலை வாழ்த்து
/
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் ஸ்வேதாவுக்கு அண்ணாமலை வாழ்த்து
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் ஸ்வேதாவுக்கு அண்ணாமலை வாழ்த்து
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் ஸ்வேதாவுக்கு அண்ணாமலை வாழ்த்து
ADDED : மே 10, 2024 02:03 AM

கோவை;பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஸ்வேதாவுக்கு, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
பிளஸ்2 தேர்வு முடிவுகள், கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் கோவையை சேர்ந்த மாணவி ஸ்வேதா, 595 மதிப்பெண்கள் பெற்றார். இவருக்கு பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மாணவி ஸ்வேதா, அவரது தந்தை ராஜ்மோகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
கடுமையான உழைப்பை, கல்வியில் ஆர்வத்தை, விடாமுயற்சியினை வெளிப்படுத்தியுள்ள தங்கள் மகளுக்கு ஒளிமயமான, மிகச்சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. பிள்ளைகள் பெறும் பெருமையும், வெற்றியும், பெற்றோர்களுக்கு ஆனந்தம் கொடுக்கும்.
பிள்ளைகளின் வெற்றி, பெற்றோரின் பெருமைக்குரிய வெற்றி. மாணவர்கள் அனைவருக்கும் உந்து சக்தியாக, முன் மாதிரியாக திகழும் தங்கள் மகள், கடின உழைப்பு, கவனப்பயிற்சி, விடாமுயற்சி ஆகியவை வெற்றிக்கான அடிப்படை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னலமற்ற உழைப்பு, தவறாத முயற்சி, தணியாத ஆர்வம், உயர்கல்வியில் தங்களுக்கு மேலும் பல உயரங்களை வழங்கி, வரும் காலத்தில், நாட்டுக்கும், மக்களுக்கும், மொழிக்கும், சமூகத்துக்கும் தொண்டு செய்து சிறப்பித்து வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு, அவர் கூறிஉள்ளார்.