/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இங்கே குப்பை போடுறவன் ரத்தம் கக்கி சாவான்!' குப்பை கொட்டுவதை தவிர்க்க 'திகில்' பேனர்
/
'இங்கே குப்பை போடுறவன் ரத்தம் கக்கி சாவான்!' குப்பை கொட்டுவதை தவிர்க்க 'திகில்' பேனர்
'இங்கே குப்பை போடுறவன் ரத்தம் கக்கி சாவான்!' குப்பை கொட்டுவதை தவிர்க்க 'திகில்' பேனர்
'இங்கே குப்பை போடுறவன் ரத்தம் கக்கி சாவான்!' குப்பை கொட்டுவதை தவிர்க்க 'திகில்' பேனர்
ADDED : மே 13, 2024 01:16 AM

கோவை;பொது வெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, பயமுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்படுகின்றன. ஆனாலும், மக்கள் அதை ரசித்து சிரித்தபடி, அதே இடத்தில் குப்பை கொட்டுவதை என்னவென்பது!
மாநகராட்சி பகுதிகளில் மக்கும், மக்காதது என தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. வெள்ளலுார் குப்பை கிடங்கில் இவை பல ஆண்டுகளாக கொட்டப்பட்டதால், சுகாதார சீர்கேடு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.
குப்பையை தரம் பிரித்து வாங்குவதுடன், 'ஹாட் ஸ்பாட்' எனப்படும் பொதுவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க, எச்சரிக்கை பேனர்கள் வைக்கப்படுகின்றன. அதையும் மீறி கொட்டுபவர்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்கும் விதமாக, கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில், 'திகில் பேனர்கள்' வைக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி, 58, 60, 61 உள்ளிட்ட வார்டுகளில், நடிகர் வடிவேலு புகைப்படத்துடனான பேனரில், 'இங்கு குப்பை போடுறவன் ரத்தம் கக்கி சாவான்', 'அடேய்... சும்மா குப்பையை ரோட்டுல கொட்டாம பிரிச்சி குடுங்கடா' போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், பையில் குப்பை பொட்டலத்துடன் வருபவர்கள், இதை பார்த்து சிரித்தபடி, தொடர்ந்து குப்பை கொட்டிச் செல்கின்றனர்.
துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'என்னதான் விழிப்புணர்வு, எச்சரிக்கை பேனர்கள் வைத்தாலும், மக்களிடம் இன்னும் அலட்சியம் காணப்படுகிறது. யாரும் இல்லாத சமயத்தில் குப்பையை ரோட்டோரம் கொட்டுகின்றனர். மக்கள் பொறுப்பை உணர்ந்து, எங்களிடம் தரம் பிரித்து தந்தால் வார்டு சுகாதாரமாக இருக்கும்' என்றனர்.