/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கை மத்திய அரசு கையாள வேண்டுகோள்
/
மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கை மத்திய அரசு கையாள வேண்டுகோள்
மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கை மத்திய அரசு கையாள வேண்டுகோள்
மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கை மத்திய அரசு கையாள வேண்டுகோள்
ADDED : ஆக 17, 2024 10:55 PM
போத்தனூர்:மேற்குவங்கத்தில் சட்டம்- ஒழுங்கை, சிறிது காலம் மத்திய அரசு கையாள வேண்டும், என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
கோவை, குனியமுத்தூரில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கோல்கட்டாவில் மருத்துவ முதுநிலை பட்டதாரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டுள்ளதற்கு, கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அம்மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு உள்ளதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசிடம் இருந்து, சட்டம் - ஒழுங்கை சிறிது காலம் மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்துதர வேண்டும்.
மாஞ்சோலை தேயிலை தோட்டம், ஆங்கிலேய கம்பெனியால் குத்தகைக்கு பெறப்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் அங்குள்ளனர். அங்கிருந்து மக்கள் வெளியேற தேவையில்லை.
இத்தொழிலாளர்கள் அங்கேயே இருந்து வனத்தை பாதுகாப்பர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பேட்டுள்ளேன். மாநில அரசு இதனை கவுரவ பிரச்னையாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
பட்டியல் இனத்தவர், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானவர்கள். மத்திய அரசின் துறைகளில், 22 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. மாநில அரசில், 19 சதவீதமே தரப்படுகிறது. அதிலும், ஏ, பி, பிரிவுகளில், மூன்று சதவீதம் கூட நிரப்பப்படவில்லை. நான்காவது பிரிவில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது.
அதற்கு பதிலாக, அருந்ததியினருக்கு ஒருதலைபட்சமாக, முன்னுரிமை கொடுத்து உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை. பட்டியல் சமூக தலைவர்கள் மூவரை, முதல்வர் ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

