/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்பகுப்பாய்வு துறையின் கீழ் பிளாஸ்டிக் குறைக்க ஏற்பாடு
/
நீர்பகுப்பாய்வு துறையின் கீழ் பிளாஸ்டிக் குறைக்க ஏற்பாடு
நீர்பகுப்பாய்வு துறையின் கீழ் பிளாஸ்டிக் குறைக்க ஏற்பாடு
நீர்பகுப்பாய்வு துறையின் கீழ் பிளாஸ்டிக் குறைக்க ஏற்பாடு
ADDED : மார் 13, 2025 06:16 AM
கோவை; நீர்பகுப்பாய்வுத்துறையின் கீழ், மாதிரிகள் சேகரிக்க பாலிப்ரொப்பிலீன் வகை கேன்கள் ஏப்., மாதம் முதல் பயன்படுத்தப்படவுள்ளன.
பொது சுகாதாரத்துறையின் கீழ், நீர்பகுப்பாய்வு துறை செயல்படுகிறது. இத்துறையின் கீழ், நீர்பகுப்பாய்வு ஆய்வகங்கள், தமிழகத்தில் கோவை உட்பட நான்கு இடங்களில் செயல்படுகின்றன.
கோவை ஆய்வகத்தில், கோவை நீலகிரி, திருப்பூர், நாமக்கல்,சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள், ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும், 500 முதல் 600 வரை நீர் மாதிரிகள், கேன்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. இதில், பிளாஸ்டிக் கேன்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பாலிப்ரொப்பிலீன் வகை கேன் பயன்படுத்தப்படவுள்ளது.
இதுவும் ஒருவித பிளாஸ்டிக் வகை தான் என்றாலும், பொதுவாக உணவு பேக்கிங் துறையில் பயன்படுத்தப்படும், அதிக உறுதித்தன்மையுடன், வெயில் தாங்கும் தன்மையுடன், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.
இதுகுறித்து, மேற்கு மண்டல தலைமை நீர்பகுப்பாய்வாளர் சுப்பிரமணியன் கூறுகையில், '' பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வந்த கேன்களை திரும்ப ஒப்படைக்கவுள்ளோம். ஏப்., முதல் பாலிப்ரொப்பிலீன் வகை கேன்கள் பயன்படுத்தவுள்ளோம். 2000 கேன்கள் தற்போது பயன்பாட்டுக்கு வரவுள்ளன,'' என்றார்.