/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு விழாவில் அசத்திய சம்ஹிதா அகாடமி
/
விளையாட்டு விழாவில் அசத்திய சம்ஹிதா அகாடமி
ADDED : பிப் 24, 2025 11:18 PM

கோவை, ; மலுமிச்சம்பட்டி, தி சம்ஹிதா அகாடமி பள்ளியில், குழந்தைகளுக்கான விளையாட்டு விழா, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், கோலாகலமாக நடந்தது.
சுமார் ஏழு பள்ளிகளை சார்ந்த மழலையர், வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
30 மீட்டர், 50 மீட்டர் மற்றும் 75 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், பந்து சேகரிப்பு, கிட்ஸ் ஜாவிளின், தடை ஓட்டம், ஷட்டில் ரன் உள்பட, பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒட்டு மொத்த பள்ளிக்கான சாம்பியன்ஷிப்பை, பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியும், இரண்டாம் பரிசினை விஷ்வான்கர் பள்ளியும் வென்றது.
மழலையர் பிரிவில் முதல் பரிசினை தி சம்ஹிதா அகாடமியும், இரண்டாம் பரிசினை பிருந்தாவன் வித்யா மந்திர் பள்ளியும் வென்றன. பள்ளி முதல்வர் புஷ்பஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிதா, காந்திநாதன் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.