/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீச்சல் போட்டியில் வீரர்கள் 'பாய்ச்சல்' ; பள்ளி மாணவர்கள் 20 பேர் அசத்தல்

ADDED : செப் 15, 2024 11:57 PM
கோவை : பாரதியார் பல்கலையில் நேற்று நடந்த நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பிரீ ஸ்டைல், பிரெஸ்ட் ஸ்டிரோக் பிரிவுகளில் அசத்தினர்.
முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள் பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 129 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 100 மீ., பட்டர்பிளை உட்பட, 10 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பாய்ந்து சென்று இலக்கை அடைய போராடினர்.
வீரர்களுக்கான, 100 மீ., பட்டர்பிளை பிரிவில் மோனிஸ், 100 மீ., பேக்ஸ்டிரோக் பிரிவில் அகில்பாலாஜி, 50 மீ., பட்டர்பிளை பிரிவில் ரவுசப், 400 மீ., பிரீஸ்டைல் பிரிவில் அகில்பாலாஜி, 200 மீ., ஐ.எம்., பிரிவில் சாருதக் ஷன், 50 மீ., பிரெஸ்ட் ஸ்டிரோக் பிரிவில் ஆதிசேசன், 50 மீ., பிரீ ஸ்டைல் பிரிவில் ரவுசப், 50 மீ., பேக்ஸ்டிரோக் பிரிவில் மோனிஸ், ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வீராங்கனைகளுக்கான பிரிவில், 50 மீ., பட்டர்பிளை பிரிவில் ஐஸ்வர்யா, 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் அத்விகா கிரிஸ், 50 மீ., பேக்ஸ்டிரோக் பிரிவில் யுக்திகா, 100 மீ., பட்டர்பிளை பிரிவில் மித்ரா, 200 மீ., ஐ.எம்., பிரிவில் ஸ்ரீ சம்ருதா, 50 மீ., பிரீஸ்டல் பிரிவில் வைகா, ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.