/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் பாவப் பரிகாரப் பவனி
/
மேட்டுப்பாளையத்தில் பாவப் பரிகாரப் பவனி
ADDED : மார் 12, 2025 11:23 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், தவக்காலம் கடந்த ஐந்தாம் தேதி திருநீற்று புதனுடன் துவங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதையும், திருப்பலியும் நடந்தது. தினமும் காலையில் திருப்பலியும், சிறிய சிலுவை பாதையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து, காரமடை மதலேன் மரியா ஆலயம் வரை, பாவ பரிகார பாதயாத்திரை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
பவனியில் இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில், 14 இடங்களில் சிலுவை பாதை காட்சிகள் இடம் பெற்றன. இதில் சிறுவர்கள், இளைஞர், இளம்பெண்கள், ஒலி, ஒளி காட்சியில் நடித்தனர். ஒவ்வொரு இடத்திலும் பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், சிலுவை பாதை ஜெபங்களை சொல்லி வந்தார். பாடல் குழுவினர் பாடல்களை பாடி வந்தனர். கிறிஸ்தவ மக்கள் ஜெபமாலை சொல்லி ஜெபித்து வந்தனர்.
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில் இரவு, 10:00 மணிக்கு பாத யாத்திரை பவனி துவங்கியது.
காரமடை மதலேன்மரியா ஆலயத்துக்கு அதிகாலை, 3:00 மணிக்கு சென்றடைந்தனர். அங்கு ஆலயத்தில் பாதிரியார் சிஜூ திருப்பலியை நிறைவேற்றினார்.