sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தடை செய்த கல்குவாரிகளை இயக்க முயற்சி கலெக்டரிடம் விவசாயிகள் பகிரங்க புகார்

/

தடை செய்த கல்குவாரிகளை இயக்க முயற்சி கலெக்டரிடம் விவசாயிகள் பகிரங்க புகார்

தடை செய்த கல்குவாரிகளை இயக்க முயற்சி கலெக்டரிடம் விவசாயிகள் பகிரங்க புகார்

தடை செய்த கல்குவாரிகளை இயக்க முயற்சி கலெக்டரிடம் விவசாயிகள் பகிரங்க புகார்


ADDED : ஜூலை 29, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மதுக்கரையில் தடை செய்தகல்குவாரிகளை மீண்டும் இயக்கமுயற்சி நடக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்று நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது.

இதில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் மனு அளித்தனர். கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வழக்கமாக மீன்பிடிக்கும் குளங்களில் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும், என்று கோரி மீனவர்கள் வலையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமையில் வந்த விவசாயிகள்; மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் முழுமையாக விவசாயத்தை நம்பி இருந்து வருகிறார்கள். மதுக்கரையில் இரண்டு கல்குவாரிகள் இயங்க, 15 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.

ஏற்கனவே 100 அடி ஆழம் தோண்டப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கல்குவாரிகளுக்கு அருகில் கிட்டத்தட்ட, பத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள், குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கல்குவாரிகளை இயக்க நடக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றனர்.

குறிச்சி பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், குறிச்சி புதுநகர் எல்.ஐ.சி. காலனியில் மதுக்கடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் மதுக்கடைக்கான அனுமதியை நிறுத்த வேண்டும் என்றனர்.

மக்கள் பசுமை இயக்கத்தினர்; மதுக்கரை பகுதியில் பழமையான அரச மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

வேடப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன்; தனியார் செல்போன் நெட்ஒர்க் கட்டணத்தை உயர்த்தியதால் பி.எஸ்.என்.எல். இணைப்புக்கு அனைவரும் மாற வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.

சாய்பாபா கோவிலிலுள்ள அண்ணாமார்க்கெட்டில் ஏற்கனவே இருந்த 476 கடைகளுக்கு நிதி ஒதுக்கி புனரமைப்பு பணி மேற்கொண்டு மீண்டும் ஒப்படைப்பதாக அறிவித்த மாநகராட்சி தற்போது அக்கடைகளை பொது ஏலத்தில் விடுவதாக அறிவித்துள்ளது. அதற்கு தடை விதிப்பதோடு ஏற்கனவே ஒதுக்கீடு பெற்றவர்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மனு கொடுத்தனர்.

கோவையிலுள்ள 108 ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடங்களிலும் கழிவறையுடன் கூடிய ஓய்வறை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கலெக்டரிடம் மனு சமர்பித்தனர்.

வீடுகேட்டு, 47 மனுக்கள், பட்டா கேட்டு, 221 மனுக்கள், வேலை வாய்ப்புக்கு 18 மனுக்கள், 231 இதர மனுக்கள் என்று மொத்தம் 516 கோரிக்கை மனுக்கள் நேற்று வந்தது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us