/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கணும்! வனத்துறையினர் வேண்டுகோள்
/
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கணும்! வனத்துறையினர் வேண்டுகோள்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கணும்! வனத்துறையினர் வேண்டுகோள்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கணும்! வனத்துறையினர் வேண்டுகோள்
ADDED : ஆக 13, 2024 02:19 AM

வால்பாறை;வால்பாறையின் இயற்கை அழகை பாதுகாக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், உலகின் அரிய வகை வனவிலங்குகள், பசுமை மாறாக்காடுகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. இதற்கு மாற்றாக காகிதப்பை, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வனத்துறை மற்றும் நகராட்சி சார்பில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும் வால்பாறையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இங்குள்ள சில கடைகளிலும், எஸ்டேட் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் புழக்கம் உள்ளது. குறிப்பாக, வால்பாறை வரும் சுற்றுலா பயணியருக்கு, பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்குகின்றனர்.
அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது, நகராட்சி நிர்வாகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இங்கு வரும் சுற்றுலா பயணியர், உணவு பொட்டலங்களை ரோட்டில் வீசிச்செல்வதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க, சுற்றுலா பயணியரும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.