/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்சாரி வீதியில் அவஸ்தை; களம் இறங்கியது மாநகராட்சி
/
அன்சாரி வீதியில் அவஸ்தை; களம் இறங்கியது மாநகராட்சி
அன்சாரி வீதியில் அவஸ்தை; களம் இறங்கியது மாநகராட்சி
அன்சாரி வீதியில் அவஸ்தை; களம் இறங்கியது மாநகராட்சி
ADDED : மே 13, 2024 01:16 AM

கோவை;ராம்நகர், அன்சாரி வீதியில் அடிக்கடி ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்பால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
மாநகராட்சி, 67வது வார்டு ராம் நகரில் கோவில்கள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இங்குள்ள அன்சாரி வீதியில் பாதாள சாக்கடை பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது.
நேற்று மதியம், 1:00 மணி முதல் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக தெற்கே காட்டூர், ரங்கன் வீதி செல்லும் ரோட்டில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடைகள், ஒர்க்ஷாப் என பரபரப்பு மிகுந்த இப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்தனர். மாலை, 4:00 மணிக்கு பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனம் வாயிலாக, மாநகராட்சி பணியாளர்கள் சரிசெய்தனர்.
பொது மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை, சாக்கடை கால்வாய்களில் கொட்டுவதை தவிர்த்தால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர், மாநகராட்சி பணியாளர்கள்.