/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகல்வி துறைக்கு கேடுகாலம் அர்ஜுன் சம்பத் சாபம்
/
பள்ளிகல்வி துறைக்கு கேடுகாலம் அர்ஜுன் சம்பத் சாபம்
பள்ளிகல்வி துறைக்கு கேடுகாலம் அர்ஜுன் சம்பத் சாபம்
பள்ளிகல்வி துறைக்கு கேடுகாலம் அர்ஜுன் சம்பத் சாபம்
ADDED : செப் 09, 2024 08:01 AM

திருவள்ளூர் : திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.
பின், அவர் அளித்த பேட்டி :
சென்னையில் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆன்மிக நிகழ்வில், சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் ஆற்றிய சொற்பொழிவில் திருக்குறளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைச் சொல்லி, அதன் பொருளை சொல்லியுள்ளார். இதை அரசியலாக்கி, ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். இது தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு கேடுகாலம்.
தமிழகத்தில், அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் பைபிள் வினியோகம் செய்யப்படுகிறது; இதை அரசு தட்டிக் கேட்பதில்லை.
நடிகர் விஜய் கட்சி துவக்கி இருக்கிறார். அவரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. தி.மு.க.,வின் ஊதுகுழல் தான் தமிழக வெற்றிக் கழகம். இவ்வாறு அவர் கூறினார்.