/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேக்கரி பணியாளர் ரயிலில் அடிபட்டு பலி
/
பேக்கரி பணியாளர் ரயிலில் அடிபட்டு பலி
ADDED : ஆக 26, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி ரயில்வே தண்டவாளத்தில், பேக்கரி பணியாளர் ரயிலில் அடிபட்டு பலியானார்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன், 44. இவர் கிணத்துக்கடவு, முள்ளுப்பாடியில் உள்ள தனியார் பேக்கரியில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அதிவேகமாக வந்த ரயில் ஐயப்பன் மீது மோதி விபத்து நடந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.