/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தண்டில் கூன் வண்டு தாக்குதல்
/
வாழைத்தண்டில் கூன் வண்டு தாக்குதல்
ADDED : மார் 04, 2025 11:36 PM

கிணத்துக்கடவு; வாழைத்தண்டில் கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், 150 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஆங்காங்கே வாழைத்தாரின் தண்டுகளில் கூன் வண்டு தாக்குதல் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதில், வாழையில் காய்ந்த இலைகளை அடிக்கடி அறுத்து, வாழை தோட்டத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தாய் வாழையில் முளைக்கும் பக்கக்கன்றுகளை மாதம் ஒரு முறை அறுத்து அகற்றம் செய்ய வேண்டும்.
வண்டு தாக்கிய வாழை மரத்தை தோட்டத்திலிருந்து அகற்றம் செய்து, அதை எரியூட்டி அழிக்க வேண்டும். மேலும், வாழைத் தோட்டத்தில் ஆங்காங்கே ஆமணக்கு புண்ணாக்கு பொறிகள் வைத்தல் அவசியம் மற்றும் வாழைத்தண்டு பாகத்தின் மீது மெட்டாரைசியம் என்ற பூஞ்சானத்தை தெளித்தால், கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம், என, அவர் கூறினார்.