/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., கிளை கால்வாயில் தண்ணீர் திறப்பு
/
பி.ஏ.பி., கிளை கால்வாயில் தண்ணீர் திறப்பு
ADDED : ஏப் 09, 2024 11:50 PM

நெகமம்:பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து, கோவில்பாளையம் கிளை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை வெயிலுக்கு விளைநிலத்தில் உள்ள பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. இதை தவிர்க்கும் விதமாக, தற்போது கோவில்பாளையம் கிளை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், தேவணாம்பாளையம், வகுத்தம்பாளையம், கப்பளாங்கரை, குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், கக்கடவு, காணியாலாம்பாளையம், வலசுப்பாளையம், முள்ளுப்பாடி, நெகமம் பகுதிகளில், 4 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கோடை மழை பொய்த்து போனது. போதிய நீரும் இல்லாததால், தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் வாட துவங்கியது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதை தொடர்ந்து, கோவில்பாளையம் கிளை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை மழை இம்முறை கைகொடுக்கும் பட்சத்தில் விவசாயமும் பாதிக்காது. நிலத்தடி நீர்மட்டமும் உயரும்,' என்றனர்.

