/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் வந்தால் கெஞ்சல்; முடிந்தால் விரிசல்
/
தேர்தல் வந்தால் கெஞ்சல்; முடிந்தால் விரிசல்
ADDED : ஏப் 03, 2024 10:59 PM
நீலகிரி மாவட்ட தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் முபாரக், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோஷ்டி பூசல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. பிரச்னைகள் பூதாகரமாகும் போது கட்சி மேலிடம் 'அட்வைஸ்' செய்து அடக்கி வைத்தாலும் மறைமுக 'பனிப்போர்' தொடர்கிறது.
'மாவட்ட' வாரிசுக்கும் அவரின், ஆதரவாளர்களுக்கும், மாநில நிர்வாகிகள் பொறுப்பு வழங்கி இருப்பது அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்கனவே அதிருப்தியடைய செய்துள்ளது.
இந்நிலையில், நடப்பு தேர்தலில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் தோல்வி பயம் வந்ததால், எதிர் துருவங்களாக உள்ள, இரு தரப்பு நிர்வாகிகளையும் அழைத்து, ' கட்சிக்கு வேலை செய்யுங்க; நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டது,' என, கெஞ்சாத குறையாக கேட்டுள்ளனர்.
இதை கேட்ட கட்சியினர் சிலர், தேர்தல் வந்தால் 'அட்வைஸ்'; முடிந்ததும் விரிசல், இது கோஷ்டி பூசலில் சகஜம் தானே என கூறி சென்றனர்.

