/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு குழு
/
கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு குழு
ADDED : ஏப் 26, 2024 11:19 PM
அன்னுார்;'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய ஊராட்சி அளவில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூடுதல் கலெக்டர் ஸ்வேதா சுமன், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது :
கோவை மாவட்டத்தில், ஊரக வீட்டு வசதி திட்டமான, 'கலைஞரின் கனவு இல்லம்' 2024-- 25க்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யவும், பயனாளிகளின் தகுதியை மதிப்பிடுவதற்கும், ஊராட்சி அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழு அமைக்க வேண்டும்.
இந்த குழுவில், ஊராட்சி தலைவர், ஒன்றிய பொறியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோரை சேர்க்க வேண்டும்.
இந்த குழு பயனாளிகளின் தற்போதைய நிலையை மதிப்பிடுவதற்கு அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும், குழு அமைத்து அதன் அறிக்கையை உடனடியாக ஊரக வளர்ச்சி முகமைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

