/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை இளங்கலை முதுநிலை சேர்க்கை துவக்கம்
/
பாரதியார் பல்கலை இளங்கலை முதுநிலை சேர்க்கை துவக்கம்
பாரதியார் பல்கலை இளங்கலை முதுநிலை சேர்க்கை துவக்கம்
பாரதியார் பல்கலை இளங்கலை முதுநிலை சேர்க்கை துவக்கம்
ADDED : மே 04, 2024 11:44 PM
கோவை;பாரதியார் பல்கலையில் உள்ள, இளங்கலை, முதுநிலை பிரிவுகளில் 2024 - 2025ம் ஆண்டின் சேர்க்கைக்கு தகுதியுடைய மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, பி.வோக்., பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், எம்.ஏ., -- எம்.எஸ்சி., - எம்.காம்., எம்.சி.ஏ., - எம்.பி.எட்., மற்றும் முதுநிலை பட்டயப்படிப்புகளில் சேர்க்கை நடைபெறவுள்ளது.
தகுதியுடைய மாணவர்கள், விண்ணப்பங்கள், தகவல் தொகுப்பு கையேடு, மாணவர்களின் எண்ணிக்கை, கட்டணம், கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகள் உள்ளிட்டவை www.b-w.ns.in என்ற இணையதளத்தில், வரும் 6ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் 400 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 200 ரூபாய் கட்டணம் செலுத்திய சான்று, இதர சான்றிதழ்களுடன் ஜூன் 6 மாலை, 5:30 மணிக்குள் சம்பந்தப்பட்ட பல்கலை துறைத்தலைவரிடம் இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதியாண்டு, இறுதிபருவத்தில் உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விபரங்கள், மேலும் பிற தகவல்களை இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், எம்.பி.ஏ., பிரிவுக்கான மாணவர்கள் சேர்க்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் நடத்தப்படும் கவுன்சிலிங் வாயிலாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.