/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் அணை நீர்மட்டம்: ஒரே நாளில் 16 அடி உயர்வு
/
பில்லுார் அணை நீர்மட்டம்: ஒரே நாளில் 16 அடி உயர்வு
பில்லுார் அணை நீர்மட்டம்: ஒரே நாளில் 16 அடி உயர்வு
பில்லுார் அணை நீர்மட்டம்: ஒரே நாளில் 16 அடி உயர்வு
ADDED : மே 03, 2024 11:04 PM
மேட்டுப்பாளையம்:அப்பர் பவானி அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விட்டதால், ஒரே நாளில் பில்லூர் அணையின் நீர்மட்டம், 16 அடி உயர்ந்துள்ளது.
கோவை மாவட்ட எல்லையில், பில்லுார் வனப்பகுதியில், 100 அடி உயரத்தில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, நீலகிரி மாவட்டம், வட கேரளம் ஆகிய பகுதிகள், இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகள். கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யாததால், அணையின் நீர்மட்டம், 55 அடி வரை குறைந்துள்ளது. இதனால், கோவை மாநகராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில் அப்பர் பவானி அணையில் இருந்து, பில்லூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடும்படி, அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதன் பேரில், மே 1ம் தேதி அப்பர் பவானி அணையில் இருந்து, குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் வடகேரளம் முக்காலி, அட்டப்பாடி வழியாக இரண்டாம் தேதி காலை, 10 மணிக்கு பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 1,595 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஒரே நாளில் பில்லூர் அணையின் நீர்மட்டம், 16 அடி உயர்ந்து, தற்போது, 71 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் குறைந்து வந்ததால், கோவைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற நிலையில் இருந்தது. அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், தற்போது குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு குறைந்துள்ளது.