/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர்களுக்கு பூத் சிலிப்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
/
வாக்காளர்களுக்கு பூத் சிலிப்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
வாக்காளர்களுக்கு பூத் சிலிப்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
வாக்காளர்களுக்கு பூத் சிலிப்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ADDED : ஏப் 14, 2024 11:26 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு, பூத்சிலிப் வழங்கும் பணி நடக்கிறது. வீடு,வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத்சிலிப்புகளை நிலைய அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் வழங்குகின்றனர்.
பூத் சிலிப், 'க்யூஆர்' கோடுடன் வழங்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவரின் பெயர் மற்றும் அவரது மொபைல் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழி காட்ட, வாக்காளர் கையேடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் பார்வையாளர் (பொது) அனுராக் சவுத்ரி, பூத் சிலிப் வழங்கும் பணியை ஆ.சங்கம்பாளையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, தாசில்தார் ஜெயசித்ரா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.