/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவில் போர்வெல் அமைக்கும் பணி: விதிமீறலை தடுக்க ஆய்வு அவசியம்
/
இரவில் போர்வெல் அமைக்கும் பணி: விதிமீறலை தடுக்க ஆய்வு அவசியம்
இரவில் போர்வெல் அமைக்கும் பணி: விதிமீறலை தடுக்க ஆய்வு அவசியம்
இரவில் போர்வெல் அமைக்கும் பணி: விதிமீறலை தடுக்க ஆய்வு அவசியம்
ADDED : ஏப் 22, 2024 12:13 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், விதிமீறி இரவு நேரத்தில், போர்வெல் அமைக்கப்படுவதால், மக்கள் பாதிக்கின்றனர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், அத்தியாவசிய தேவை மற்றும் விவசாய நீர் பயன்பாட்டிற்காக, போர்வெல் அமைக்கப்படுகிறது. அவ்வகையில், போர்வெல் அமைக்க விரும்பும் நில உரிமையாளர்கள், குறைந்தபட்சம், 15 நாட்களுக்கு முன், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு வாயிலாக, எழுத்துப் பூர்வமாக அனுமதி வேண்டி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
போர்வெல் அமைக்கும் நிறுவனத்தாரும் மாவட்ட நிர்வாகத்திடம், பதிவு செய்து கொள்ள வேண்டும். பணி நடக்கும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பாக வேலி அமைக்கப்பட வேண்டும்.
ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட பின், கிணற்றின் முகப்பில் சுற்றி, அரை மீட்டர் அளவுக்கு கான்கிரீட் மேடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஆனால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி பேரூராட்சி மற்றும் ஊராட்களில், எவ்வித விதிமுறையையும் பின்பற்றாமல் இரவு நேரங்களில் 'போர்வெல்' அமைக்கப்படுகிறது. அப்போது, அருகே இருக்கும் குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கின்றனர். இரவில், குழந்தைகள், முதியவர்கள் என பலரும், துாக்கம் இழக்கின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது: இரவு நேரத்தில், மக்கள் வீடுகளில் முடங்கி விடுவதால், நகர, கிராமப்புற சாலைகளில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை. இதனை சாதகமாக்கி, போர்வெல் அமைக்கப்படுகிறது.
குறிப்பாக, சூளேஸ்வரன்பட்டி, சமத்துார், கோட்டூர் என, குடியிருப்பு கட்டுமானங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் இத்தகைய விதிமீறல் தொடர்கிறது. இதனை கட்டுப்படுத்த, வருவாய்த்துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்வதுடன், கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அனுமதி பெறாமல் இருந்தால் அபராதம் விதிப்பதுடன், பிரச்னைக்கு தீர்வு காண சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு, கூறினர்.

