/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடல் புற்றுநோய் அறிகுறி; ஆரம்பத்தில் கண்டறிய பயிற்சி
/
குடல் புற்றுநோய் அறிகுறி; ஆரம்பத்தில் கண்டறிய பயிற்சி
குடல் புற்றுநோய் அறிகுறி; ஆரம்பத்தில் கண்டறிய பயிற்சி
குடல் புற்றுநோய் அறிகுறி; ஆரம்பத்தில் கண்டறிய பயிற்சி
ADDED : மார் 05, 2025 12:19 AM
கோவை; தொற்றா நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கோவையில் முன்மாதிரியாக பெருங்குடல், மலக்குடல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திட்டம், கடந்தாண்டு முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம், 21 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள சுகாதார நிலையங்களில் விரிவுபடுத்தப்படவுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி கூறியதாவது:
பெருங்குடல், மலக்குடல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய, பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய, அனைத்து சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில், இனி வியாழன் தோறும் காலை, 9:00 முதல் 10:00 மணி வரை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிந்துரைக்கப்பட்ட அறிகுறிஉள்ளவர்களுக்கு, சிறப்பு பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் அறிகுறிகள் சாதாரணமாக இருக்கும்.
நாள்பட்ட வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வழக்கமான மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம், நாள்பட்ட வயிற்றுவலி, அசவுகரியம், மிகுதியான சோர்வு, ரத்தசோகை, எடை இழப்பு, மலத்தில் ரத்தம், மலம் கழிக்கும் போது ரத்தக்கசிவு ஆகிய அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், உடனே டாக்டரை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.