/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கான முதல் உணவு தாய்ப்பால்! விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதியேற்பு
/
குழந்தைகளுக்கான முதல் உணவு தாய்ப்பால்! விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதியேற்பு
குழந்தைகளுக்கான முதல் உணவு தாய்ப்பால்! விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதியேற்பு
குழந்தைகளுக்கான முதல் உணவு தாய்ப்பால்! விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதியேற்பு
ADDED : ஆக 02, 2024 05:57 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில், உலக தாய்ப்பால் வாரம் துவக்க விழா நடந்தது.
ஆண்டு தோறும், ஆக., 1 முதல் 7ம் தேதி வரை, உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தாய்ப்பால் வார விழா,பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார்.
விழாவில், குழந்தைகள் நலப்பிரிவின் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில், மகப்பேறு டாக்டர்கள், குழந்தைகள் நல டாக்டர்கள், செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள், டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி கல்லுாரி மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
டாக்டர்கள் கூறியதாவது:
இந்த ஒரு வாரத்தில் பிரசவமான தாய்மார்களுக்கு தாய்ப்பாலின்மகத்துவம் குறித்து எடுத்துரைப்பது, புட்டி பால், பால் பவுடரால் ஏற்படும் தீங்கினை எடுத்து செல்வது, தாய்ப்பால் கொடுப்பதன் வாயிலாக, தாய்க்கும் குழந்தைக்கும்ஏற்படும் நன்மைகளை கூறுவது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
செவிலியர் கல்லுாரி மாணவியர் வாயிலாக, ஒரு நாள் ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. ஊர்வலத்தில் தாய்ப்பாலின்நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது.
இவ்வாறு, கூறினர்.
உடுமலை
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் அங்கன்வாடி மையங்களில், தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு துவங்கியது.
குழந்தைகளுக்கு, முதல் உணவாக தாய்ப்பால் இருப்பதன் அவசியம் குறித்து, தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும், இந்த விழா கொண்டாடப்படுகிறது.
தாய்மார்களின் உடல்நலம் மேம்படுவதற்கான உணவு முறை, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மார்கள் பெறும் நன்மைகள், எந்த வயது வரை தாய்ப்பால் ஊட்டுவது, இணை உணவுகள் வழங்குவது குறித்து, வாரம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வேளாங்கன்னி கூறியதாவது: குழந்தைகள் பிறந்து, ஒரு மணி நேரத்திலிருந்து, தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம். அவர்ளுக்கு, தாய்ப்பால் மட்டுமே பிரதான உணவாக இருக்க வேண்டும்.
ஆறு மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு மட்டுமே, துணை உணவுகள் வழங்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு முதன்மையான உணவு என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
முதலில் மாவட்ட அளவில் துவக்கப்பட்டு, பின் மையங்களுக்கு நடத்தப்படும். இறுதியாக வட்டார அளவில் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறு, கூறினார்.