/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவர்களுக்கு 'ப்ரீத் அனலைசர்' பரிசோதனை
/
டிரைவர்களுக்கு 'ப்ரீத் அனலைசர்' பரிசோதனை
ADDED : மே 17, 2024 01:32 AM

கோவை;காந்திபுரம் டவுன் பஸ்ஸ்டாண்டில் நேற்று முன் தினம், டிரைவர் ஒருவர் மதுபோதையில் தனியார் டவுன் பஸ்சை இயக்கி உயிர்பலி ஏற்படுத்திய சம்பவத்தை அடுத்து, நேற்று போக்குவரத்து போலீசார் 'ப்ரீத்அனலைசர்' கருவியை கொண்டு, டிரைவர்களிடம் பரிசோதனை மேற்கொண்டனர்.
கோவை மத்திய போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட போலீசார் நேற்று மாலை காந்திபுரம் டவுன்பஸ் ஸ்டாண்ட் வந்த தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களை அழைத்து 'பிரீத் அனலைசர்' கருவியை கொண்டு, வாயால் ஊதசொல்லி பரிசோதனை மேற்கொண்டனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட டவுன் பஸ் டிரைவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் யாரும் மதுஅருந்தியதாக பதிவாகவில்லை.
பஸ் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து, அதிகாலை முதல் காலை 10:00 மணி வரை, திடீர் சோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

