
செய்முறை:
மூன்று வாழைப்பழத்தை நறுக்கி தோலுரித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் உருகும் வரை காய்ச்ச வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை கப் நெய் சேர்த்து சூடானதும், அதில் அரை கப் கோதுமை மாவு சேர்த்து மாவும், நெய்யும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் வரை கிளறி விட வேண்டும். பின் இதனுடன் கால் கப் ரவை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். பின், அரைத்து வைத்துள்ள வாழைப்பழ கலவையை இதனுடன் சேர்த்து கரண்டியால் நன்கு கலந்து விட வேண்டும். இவை கோதுமை மாவுடன் நன்கு கலந்ததும், தயாரித்து வைத்துள்ள வெல்ல பாகு மட்டும் குங்குமப்பூ உணவு நிறமி சேர்க்கவும்.இதை நன்றாக கலந்து விட்டு, இரண்டு சிட்டிகை ஏலக்காய் பவுடர், நறுக்கிய பாதாம் பிஸ்தா பருப்புகளை சேர்க்கவும். இதை நன்றாக கரண்டியால் கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளவும். இப்போது ஒரு சிறிய ட்ரேவில் பட்டர் தடவி அதன் மீது இந்த கலவையை கொட்டி பரப்பி சமப்படுத்தி விடவும்.
இதன் மீது நறுக்கிய பாதாம் பருப்பு துாவி, பருப்புகள் கலவையில் புதையும் வகையில் கரண்டியால் லேசாக அழுத்திவிடவும். இரண்டு மணிநேரத்திற்கு பிறகு வேண்டிய வடிவில் வெட்டி பரிமாறலாம்.