/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை கிலோ ரூ.110க்கு விற்பனை
/
கொப்பரை கிலோ ரூ.110க்கு விற்பனை
ADDED : செப் 13, 2024 10:34 PM

ஆனைமலை : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 85 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 100.99 ரூபாய் முதல், 109.99 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 94 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 80.69 முதல், 95.99 ரூபாய் வரை விலை கிடைத்தது.மொத்தம், 179 கொப்பரை மூட்டைகளை, 34 விவசாயிகள் கொண்டு வந்தனர்; ஐந்து வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 8.06 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 80.55 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
* கிணத்துக்கடவு சுற்று வட்டார விவசாயிகள் பலர் தங்கள் விளைபொருட்களை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து விலை உயர்ந்ததும் விற்பனை செய்து வருகின்றனர்.
விற்பனை கூடத்தில் தற்போது 'இ - நாம்' திட்டத்தின் வாயிலாக, தேங்காய், கொப்பரை, மரவள்ளி, தக்காளி போன்ற விளை பொருட்கள், 1,380 மெட்ரிக் டன் அளவுக்கு 89.69 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதில், 211 விவசாயிகள் மற்றும் 48 வியாபாரிகள் பயனடைந்தனர்.
முதல் தர கொப்பரை, 104 முதல் 106 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை 90 ரூபாய்க்கு விற்பனை ஆனது. விற்பனை கூடத்தில், 30 விவசாயிகளுக்கு, 1.5 கோடி ரூபாய் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய விவசாயிகள் இது போன்ற திட்டத்தினை பயன்படுத்த, சிட்டா, அடங்கல் அல்லது வி.ஏ.ஓ., சான்று, ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் நகல்கள் போன்ற ஆவணங்களுடன் மொபைல் எண் பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.