/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் செலவு கணக்குடன் நாளை ஆஜராக வேட்பாளர்களுக்கு உத்தரவு
/
தேர்தல் செலவு கணக்குடன் நாளை ஆஜராக வேட்பாளர்களுக்கு உத்தரவு
தேர்தல் செலவு கணக்குடன் நாளை ஆஜராக வேட்பாளர்களுக்கு உத்தரவு
தேர்தல் செலவு கணக்குடன் நாளை ஆஜராக வேட்பாளர்களுக்கு உத்தரவு
ADDED : ஏப் 03, 2024 11:00 PM
கோவை : கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், நாளை (5ம் தேதி) நடக்கும் கூட்டத்தில், இதுவரை செய்த தேர்தல் செலவின கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதிகபட்சமாக, 95 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவழிக்க வேண்டுமென, தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. தேர்தல் நடவடிக்கை முடிவதற்குள், மூன்று முறை செலவு கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
கோவை தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் நாளை (5ம் தேதி) காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும்.
இரண்டாவது ஆய்வு கூட்டம், 10ம் தேதியும், மூன்றாவது ஆய்வு கூட்டம், 16ம் தேதியும் நடைபெறும். தேர்தல் செலவினத்துக்கான பில்கள், வவுச்சர்கள் மற்றும் தேர்தல் செலவினத்துக்கான தனி வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட, தேர்தல் செலவினம் தொடர்பான உரிய கணக்குகளுக்கான பதிவேடுகளுடன், புகைப்பட அடையாளத்துடன் பங்கேற்க வேண்டும் என, தேர்தல் அலுவலரான, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.

