/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிலிண்டரை சுமந்து தி.மு.க.,வுக்கு பிரசாரம்
/
சிலிண்டரை சுமந்து தி.மு.க.,வுக்கு பிரசாரம்
ADDED : ஏப் 03, 2024 11:12 PM

கிணத்துக்கடவு, வடசித்துார் பகுதியில் சிலிண்டரில் ஸ்டிக்கர் ஒட்டி, தி.மு.க.,வுக்காக நுாதன பிரசாரம் செய்தனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க, கிணத்துக்கடவு, வடசித்துார் பகுதியில் தி.மு.க., பிரமுகர் தம்பிராஜ் என்பவர், உடலில் சிலிண்டரை கட்டிக்கொண்டு, அதன்மீது ஸ்டிக்கர் ஒட்டி, கட்சி கொடி கையில் ஏந்திய படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களான, பஸ் ஸ்டாப், மார்க்கெட் மற்றும் கடை தெருக்களில் பிரசாரம் செய்தார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட சிலிண்டர் விலை குறைப்பு, 'நீட்' விலக்கு போன்றவைகள் குறித்து பிரசாரம் செய்தார். கட்சியினர் ஆரவாரமின்றி, தனி நபராக பிரசாரம் செய்ததை மக்கள் வேடிக்கையாக பார்த்தனர்.

