/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் சிறப்பிடம் மாணவர்களுக்கு ரொக்க பரிசு
/
அரசு பள்ளியில் சிறப்பிடம் மாணவர்களுக்கு ரொக்க பரிசு
அரசு பள்ளியில் சிறப்பிடம் மாணவர்களுக்கு ரொக்க பரிசு
அரசு பள்ளியில் சிறப்பிடம் மாணவர்களுக்கு ரொக்க பரிசு
ADDED : ஜூலை 17, 2024 12:22 AM

பெ.நா.பாளையம்;நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் படித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அமுதுகனி அறக்கட்டளை சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் படித்து, முதல் மூன்று இடங்களை பிடித்த பாக்கியலட்சுமி, லோகேஸ்வரி, முத்துராமலிங்கம் ஆகியோருக்கு முறையே, 2 ஆயிரம், 1500, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதே போல ஆங்கில வழியில் படித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மகதி, யஸ்வந்தினி, சந்தோஷ் சிவா ஆகியோருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், அறக்கட்டளை நிர்வாகி ஆனந்தன், தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.