/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசின் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி
/
மத்திய அரசின் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி
மத்திய அரசின் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி
மத்திய அரசின் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : ஆக 28, 2024 01:13 AM

கோவை,:மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மக்கள் தொடர்பகம் சார்பில், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்த ஐந்து நாட்கள் கண்காட்சி நேற்று அவினாசி சாலை, வ.உ.சி., பூங்கா அருகில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் துவங்கியது. இதில் பங்கேற்ற கோவை எம்.பி., ராஜ்குமார் பங்கேற்று கண்காட்சி, கருத்தரங்கை துவக்கிவைத்தார்.
இதில், அவர் பேசுகையில், '' மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதுகுறித்து அறிந்து, அதில் பயனடைந்து கொள்வதுமக்களின் உரிமை.
திட்டங்களை பயன்படுத்த முன்வரவேண்டும் மத்திய அரசு இளைஞர்கள், தொழில், சுகாதாரம் குறிப்பாக, பெண்கள் மேம்பாடு அனைத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்று இதுகுறித்து அறிந்துகொள்ளவேண்டும்,'' என்றார்.
மாவட்ட முன்னோடி வங்கி, தபால்துறை, சமூக நலத்துறை, இலவச கண் பரிசோதனை, சுகாதார துறையின் கீழ் காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை, பாரதிய ஜன் அவுஷதி கேந்திரா மக்கள் மருந்தகம் உள்ளிட்ட அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. , சென்னை மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாட்டுப்புற கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மத்திய அரசின் திட்டம் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
துவக்கவிழா நிகழ்வில், மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகத்தின் இயக்குனர் லீலா மீனாட்சி , திருச்சி மத்திய மக்கள் தொடர்பக அலுவலக கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ஈஸ்வரன் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.