/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்தகிராமப்புற மகளிருக்கு சான்றிதழ்
/
திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்தகிராமப்புற மகளிருக்கு சான்றிதழ்
திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்தகிராமப்புற மகளிருக்கு சான்றிதழ்
திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்தகிராமப்புற மகளிருக்கு சான்றிதழ்
ADDED : ஜூலை 13, 2024 12:45 AM
கோவை;கோவை, பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த கிராமப்புற மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களைத் தொழில் முனைவோராக்கும் வகையிலும் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 8வது பேட்ஜ் கிராமப்புற பெண்களுக்கான ஆடை வடிவமைப்பு தொடர்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 15 நாள்களுக்கு அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 160 பெண்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இதில், கல்லூரி இயக்குநர் அல்லிராணி கலந்துகொண்டு மகளிருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், பெண்கள் சுயதொழில் ஏன் செய்ய வேண்டும், நிதி சுதந்திரம் பெற வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மேலாண் மைத் துறைத் தலைவர் வெங்கடலட்சுமி, டெக்ஸ்டைல் துறைத் தலைவர் விஸ்வரஞ்சன் கோஷ் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

